செய்தி
அமைய விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போது தனிப்பட்ட காரணம் எனக் குறிப்பிடுவது போதுமானது

தாபனக் கோவைக்கு ஏற்ப அமைய விடுமுறை பெறுவதற்கு 125 என்ற விண்ணப்ப படிவத்தின் படி, அரச அதிகாரிக்கு உள்நாட்டு விடுமுறை பெற்றுக் கொள்ளும் தேவையின் போது, அந்த விடுமுறை விண்ணப்பத்தில் விடுமுறைக்கான காரணமாக தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட முடியும் என்பதோடு, அது தொடர்பாக வேறேதும் குறிப்பிடத் தேவையில்லை என்பதோடு அது தொடர்பாக வினவும் உரிமை சட்டரீதியாக நிறுவனத் தலைவருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
செயலாளர்,
கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், முன்பள்ளிக் கல்வி மற்றும் மீள்குடியேற்றம், திறன் மற்றும் மனிதவலு அபிவிருத்தி அமைச்சு
கிழக்கு மாகாணம்