2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த முடியாது என்றும், பொது விடுமுறை மற்றும் ஜனவரி 27 ஆம் திகதியே பாடசாலைத் தவணைகள் ஆரம்பமாவதன் காரணமாகவும், குறிப்பிட்ட நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த முடியாது என்றும் அமைச்சு தெரிவித்தள்ளது.
பாடசாலை கால அட்டவணை தொடர்பாக ஆகஸ்ட் 1997ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஓராண்டில் 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு, அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு 181 நாட்கள் மட்டுமே நடத்த முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் தவணைக்கான முதல் கட்டம் ஜனவரி 27 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.