சமூக மனவெழுச்சித் திறன்கள் (Socio Emotional Skills)

சமூக மனவெழுச்சித் திறன்கள் (Socio Emotional Skills)
சமூக மனவெழுச்சித் திறன்கள் எனும் போது ஒருவரின் தனியாள் உணர்வுகளை இனங் கண்டறிந்து அதனை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்து நிர்வகிப்பதும் அது போலவே பிறரின் உணர்வுத் திறன்களை இனங் கண்டறியும் ஆற்றல் என்பதையே குறிக்கும்.
மேலும் சமூக மன வெழுச்சித் திறன்களை வரைவிலக்கணம் செய்யும்போது “எமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் ஆற்றல்களின் கூட்டமைப்பு” என வரையறுக்கலாம்.(OECD.org,p.4)
சமூக மனவெழுச்சித் திறன்கள் என்பது “ஆளுமைப் பண்புகள், உந்துதல்கள் மற்றும் பெறுமானங்கள் போன்ற உளவியல் என்னக்கருக்களை விவரித்துக் கூறப் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு கருத்தாகும். (Danner,2021,p.4)
கிரீன்பெர்க் உட்பட ஏனைய அறிஞர்களின் கருத்துப்படி சமூக மனவெழுச்சித் திறன்களில் கவனம் செலுத்தும் போது பின்வரும் ஐந்து துறைகளில் கலந்துரையாடலாம் என்கிறார்கள்.
1. சுய விழிப்புணர்வு ( Self – Awareness) 1. 1.அன்றாடம் மேற்கொண்டு செல்லப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாணவர்களை அறிவூட்டம் செய்வதற்காக வகுப்பறையில் ஒரு காட்சிப் பலகையை பராமரித்தல், மேலும் அன்றைய தினம் தொடர்புடைய செயற்பாடுகளை அதில் குறிப்பிடுவதன் மூலம் மாணவர்களை உள ஆயத்த நிலையுடனும் பாதுகாப்பு உணர்வுடன் பங்கேற்க வாய்ப்பளித்தல்.
1. 2.மாணவர்களுடன் – SWOT (பலம், பலவீனங்கள், வாய்ப்புக்கள், சவால்கள்) பகுப்பாய்வை மேற்கொள்ளல்.
2. சுய முகாமைத்துவம் ( Self – Management)
2. 1. மாணவர்களுடன் இணைந்து வகுப்பறையில் மேற்கொண்டு செல்ல வேண்டிய சட்ட திட்டங்களைத் தயாரித்தல். இங்கு மாணவர்களைச் சிந்தனை கிளர்வுக்கு உட்படுத்தி அவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அது தொடர்பாக மிக முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
2. .2 மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து அவர்களது கருத்துக்களை பிறருடன் பரிமாறச் செய்ய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
3. சமூக விழிப்புணர்வு (Social Awareness)
3. 1.சிறந்த செயல் நூல்கள், குழுச் செயற்பாடுகள், பல்வேறு மதம் சார்ந்த மற்றும் கலாசார நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்தல்.
3. 2. மாணவர்களை வினோத மற்றும் இரசனை மிகுந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல். போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
4. ஆளிடைத் தொடர்புகளை மேற்கொள்ளல் தொடர்பான திறன்கள் (Relationship Skills)
4. 1. சமூகத்தில் ஏற்படும் பல்வேறு சந்தர்ப்பங்கள் தொடர்பாக அறிவூட்டம் செய்வதற்கும், அவற்றில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புக்களை ஏற்பாடு செய்தல். (வெள்ளம், அவசர நிலை போன்ற அனர்த்தங்கள் மற்றும் நிகழ்வுகள்)
4. 2. பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வுகளை கொண்டாடுதல்.(பல்வேறு கலாசாரங்கள், பின்னணிகள் மற்றும் ஆற்றல்களைக் கொண்டவர்களைப் பற்றி கலந்துரையாடவும் கற்றுக் கொள்ளவும் நேரத்தை செலவிடுதல்)
5. பொறுப்பு வாய்ந்த தீர்மானத்தை மேற்கொள்ளல். (Responsible Decision Making) :
5. 1.தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும், அவர்கள் எதிர் நோக்கவுள்ள அல்லது முகங்கொடுக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பாக போதிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளல்.
5. 2.பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளப் பொருத்தமான அணுகுமுறைகளைக் கண்டறிதல்.
சமூக மனவெழுச்சித் திறன்கள் என்பது ஒரு பிள்ளை சிறந்த சமூக உறவுகளை கட்டியெழுப்புவதற்காக விருத்தி செய்து கொள்ள வேண்டிய திறன்களின் ஒன்றிணைப்பாகும். இந்த திறன்களை சிறு வயதிலிருந்தே படிப்படியாக வளர்த்துக் கொள்ள முடியும் என்பதுடன் மேலும் அவற்றின் விருத்தி தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நல்ல அடித்தளத்தை வழங்குவதாகவும் அமையும்.
M.A. Asmeer SLTS(M.Ed)