
ஆசிரியர் பேரவையை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறது.
ஆசிரியர்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு ஆசிரியர் பேரவை ஒன்றை நிறுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பேரவையில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் தொடர்பான முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட ஆசிரியர்களின் தேவைகளை நிர்ணயம் செய்வதும் இந்த கவுன்சிலின் பணியாகும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
சுதந்திர அமைப்பாக இயங்கும் இந்த சபையின் கட்டமைப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த சபை நியமிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக நிலவி வந்த சம்பள முரண்பாடு கணக்கிடப்பட்டு, அதில் மூன்றில் ஒரு பங்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பின்னணியில் ஏனைய இரு பங்குகளையும் இந்த சபை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது. சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான கொடுப்பனவு எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படாததால் இந்த சபை நிறுவப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.