பரீட்சைசெய்தி

தமக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு மாற்று வசதி

நிலவும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை தமக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு வருவதில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் பரீட்சை நிலையங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×