செய்தி
தீபாவளியை முன்னிட்டு ஊவா, மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை
தீபாவளியை முன்னிட்டு ஊவா மற்றும் மத்திய மாகாண சபையின் கீழுள்ள தமிழ்,பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி பண்டிகை உள்ளமையினால், கொண்டாடப்பட மறுநாள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பாடசாலை எதிர்வரும் 9 ஆம் திகதி நடாத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.