செய்தி
தேர்தல் நிலைய பொறுப்பதிகாரி திடீர் மரணம்

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
கெஸ்பேவ பொல்ஹேன சிரி சதஹம் பிக்குணி ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் நிலையமொன்றில் கடமையாற்றிய 48 வயதுடைய திருமணமாகாத பெண் அதிகாரி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை முதல் கடமைகளில் ஈடுபட்டு வந்த குறித்த அதிகாரி மாலையில் அறையில் தங்கியிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளர்.