
பரீட்சை திணைக்களத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய அனைத்து ஊழியர்களையும் ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்வதற்கு பொது நிர்வாக அமைச்சு எடுத்துள்ளமையினால் தீர்மானத்தினால் அந்த திணைக்களத்தின் எதிர்கால நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதால், ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் இடமாற்றம் செய்வது இதுவே முதல் முறை. ஐந்தாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய ஊழியர்களை இடமாற்றம் செய்யுமாறு திணைக்களத்தில் உள்ள ஒரு குழுவினர் அழுத்தம் கொடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பரீட்சைகளுக்கு தமிழ் பேசும் உத்தியோகத்தர்களின் சேவை கட்டாயம் எனவும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி இடமாற்றம் செய்யப்படும் தமிழ் பேசும் உத்தியோகத்தருக்கு பதிலாக தமிழ் பேசும் உத்தியோகத்தர் ஒருவர் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட மாட்டார் எனவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, திணைக்களத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய ஊழியர்களை இடமாற்றம் செய்ய பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்திருந்தது. இடமாற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சில அதிகாரிகளின் சேவை திணைக்களத்திற்கு அத்தியாவசியமானது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அமைச்சுக்கு அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, அதிகாரிகளின் இடமாற்றங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையிலேயே ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
Aruna.lk