
விழாக்களுக்காக பணம் அறவிடுவது தடை – கல்வி அமைச்சு
பாடசாலைகளில் கொண்டாட்டங்களுக்காக மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை தடை செய்து கண்டிப்பான வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த வழிகாட்டலில், “பல பெற்றோர்கள் இந்த பண வசூல் காரணமாக கஷ்டப்படுவதாக பல புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது மாணவர்களின் பெற்றோர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
எனவே, சர்வதேச சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் முதலான விழாக்களுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.