கட்டுரை

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம்.(முழுமையான விளக்கம்)

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம்.(முழுமையான விளக்கம்)

 

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர்தரத்தில் எந்தத் துறையை தெரிவு செய்வது என்பதில் எவ்வளவு கடமையுணர்வோடு எமது நேரத்தினை செலவிடுகிறன்றோமோ அதே அளவு கடமையுணர்வுடன் பரீடசையில் சித்தியடையத்தவறிய மாணவர்களின் அடுத்த கட்டத்தினை தீர்மானிப்பதற்கு நாம் பொறுப்புடையவர்களாகின்றோம். எம்மிடம் கல்வி கற்ற மாணவன் A சித்தியினை பெறுகின்ற போதும் சரி W சித்தியினை பெறுகின்ற போதிலும் சரி அப்பெறுபேற்றுக்கான பொறுப்பினை ஏற்று அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வழியினை காட்டுவது ஒவ்வொரு ஆசிரியரது கடமையாகும்.

அனைத்து மாணவர்களுக்குமான கடைநிலை கல்வித்தகுதியினை உயர்தரத்துக்கு இணையாக்கும் நோக்கில் கல்வியமைச்சின் மூலம் 2017ம் ஆண்டு பரிசோதனை செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம் 2019ம் ஆண்டுமுதல் உத்தியோகபூர்வ கல்விச்செயற்றிட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்று முதல் தரம் பதின்மூன்று வரை எச்சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதை தவிர்த்து குறித்த மாணவர்களுக்கு தொழில்க்கல்வியினை வழங்கும் செயற்றிட்டமாக 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட  கல்வித்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

பாடசாலைக்கல்வி முறையின் மூலம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களை மீண்டும் அதே கல்வி முறைக்குள் உள்ளீர்க்கப்படுவதனால் கல்விமட்டத்தில் அவர்களை முன்னேற்றுவதில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியினை கருத்தில் கொண்டு அம் மாணவர்களினை அவர்களின் சுய திறனினை அடையாளம் கண்டு அத்திறனினை விருத்தி செய்யும் திறன்விருத்தி தொழிற்கல்வியினை வழங்கி அதன் மூலம் அவர்களினை சுயதொழில் முயற்சிகளில் ஊக்குவிக்கும் பல திட்டங்களுடன் குறித்த கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திறன்களை வளர்த்தல்  மற்றும் அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமையை பாதுகாத்தல் என்ற அனைவருக்கும் கல்வி வழங்கும் தேசிய கொள்கைக்கு அமைவாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாமையினால் பாடசாலை கல்வியினை விட்டு இடைவிலகும் மாணவர்களினால் அதிகரிக்கும் சிறுவர் குற்றங்களை தடுத்தல் மற்றும் மாணவர்களை தொழிலுக்கு தயார்ப்படுத்தல் ஆகிய விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது.

 

க.பொ.த உயர்தர பாடத்துறையில் காணப்படும்
Physical Science stream (Combined mathematics, Physics and Chemistry or information technology )
Biological Science stream (Biology (Botany and Zoology), Physics or Agricultural science and Chemistry)
Commerce stream
Arts stream
Technology stream (The subjects include Engineering Technology, Bio-system Technology, Science for Technology and a category subject)

ஆகிய பாடத்துறைகளுடன் இணைந்து புதிய பாடத்துறையாக
Vocational  Stream அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்தரத்தில் உள்ள மற்றைய பாடத்துறைகளை போன்று இப்பாடத்துறையும் இரண்டு வருட காலத்தினை கொண்டதாகும். குறித்த பாடத்துறையில் சித்தியடையும் மாணவர்களுக்கு NVQ LEVEL 4 சான்றிதழ் மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவின் The University of Vocational Technology (UNIVOTEC) மூலமாக வழங்கப்படும். மேலும் NAITA மூலமாக மாணவர்களின் JOB TRAINING மேற்பார்வை  செய்யப்பட்டு ON THE JOB TRAINING (OJT) சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கல்வியமைச்சினால் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் கல்வி கற்றமைக்கான கல்வியமைச்சின் சான்றிதழும் வழங்கப்படும்.

ஒரு NVQ (தேசிய தொழில் தகுதி) என்பது ஒரு வேலை அடிப்படையிலான கற்றல் வழி – இது ஒரு மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனம், பாடசாலை , அல்லது பணியிடத்தில் மேற்கொள்ளப்படுகிறது.  1990 ஆம் ஆண்டின் 20 ம் இலக்க கூற்றின் கீழ்  மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்விச் சட்டத்தின் முக்கிய நோக்கம் மூன்றாம் நிலை கல்வி விருது மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி வேறுபாடுகள் உள்ளிட்ட தொழிற்கல்வி விருதுகளை வழங்குவதற்கான தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறையை உருவாக்குவதாகும். அதன்படி தேசிய தொழில் தகுதி (NVQ) கட்டமைப்பு 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய தொழில் தகுதிகள் (NVQ) கட்டமைப்பு என்பது ஏழு நிலை தகுதி கட்டமைப்பாகும். ஒரு தகுதி என்பது பொதுவாக தொழிலாளர் சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப திறன் அலகுகளின் தொகுப்பாகும்.

NVQ 3 அல்லது NVQ 4ல் ஆரம்பிக்கும் மாணவர் ஒருவர் பின்வரும் படிமுறையினூடாக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டத்துக்கு இணையான கல்வித்தமைமையினை பெற்றுக்கொள்ள முடியும்.

NVQ Level 3 = GCE Ordinary Level (Respective Field)
NVQ Level 4 = GCE Advanced Level (Respective Field)
NVQ Level 5 = Diploma Level
NVQ Level 6 = Higher Diploma
NVQ Level 7 = Degree Level

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட  கல்வித்திட்டத்தில் பாடத்திட்டத்தின் பரீட்சைக்கு புள்ளித்திட்டம் மூன்று பகுதிகளாக வழங்கப்படும். 60/50 புள்ளிகள்  செய்முறைப் பரீட்சைக்கும் (60/50 என்பது  தெரிவு செய்யும் பாடத்தின் அடிப்படையில் மாறுபடலாம்) 30/40 புள்ளிகள் எழுத்து பரீட்சைக்கும் (30/40 என்பது  தெரிவு செய்யும் பாடத்தின் அடிப்படையில் மாறுபடலாம்) 10 புள்ளிகள் தனியாள் செயற்றிட்டத்திற்கும் வழங்கப்படும்.

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டம் இரு கட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.
முதலாவது வருடம் பாடசாலையிலும்
இரண்டாம் வருடம் மூன்றாம் நிலைக்கல்வி தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நிலைக்கல்விக் கற்கைகளை வழங்கும் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிலும் மாணவர்கள் இணைப்புச் செய்யப்படுவர்.

முதலாம் வருடத்தில் பாடசாலையில் இணைக்கப்படுகின்ற மாணவர்களுக்கான பாடத்திட்டமானது பொதுப் பாடங்கள், பிரயோகப் பாடங்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பொதுப் பாடங்களானது முதலாம் தவணைக்குரிய பாடங்களாகும். இது கட்டாய பாடங்களை கொண்டமைந்ததாகும். அவையாவன

First Language (Sinhala or Tamil)மொழித்திறன் (சிங்களம் அல்லது தமிழ்)

Applied English and Communication Skills Development (பிரயோக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்)
Aesthetics and related skills (அழகியல் மற்றும் தொடர்புடைய திறன்கள்)
Information and Communication Technology skills (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் திறன்கள்)
Citizenship Education and related skills (குடியுரிமைத் தேர்ச்சிகள்)
Health and life skills necessary for social well-being (சமூக நலனுக்கான சுகாதாரமும் வாழ்க்கைத் தேர்ச்சிகளும்)
Entrepreneurship skills (முயற்சியாண்மைத் திறன்கள்)
Sports and other related activities (விளையாட்டு மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள்)
Career guidance programs (தொழில் வழிகாட்டல்)

2ம் 3ம் தவணைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள 28 தொழில் கல்வி பாடங்களில் இருந்து 3 தொழில் பாடங்களை மாணவர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து கற்றல் வேண்டும். பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் 28 தொழில் பாடங்களிலிருந்து 3 பாடங்களை தெரிவு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்காமல் போகலாம். காரணம் பாடசாலையில் குறித்த பாடங்களை கற்பிக்கக்கூடிய ஆசிரிய ஆளணிகள் காணப்படாமை அல்லது குறித்த தொழில் பாடத்தினை கற்பிக்க வளவாளர்களை பாடசாலையினால் பெற்றுக்கொடுக்க முடியாது போகுமிடத்து பாடசாலைகளினால் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பாடத்தொகுதியிலிருந்து 3 பாடங்களை தெரிவு செய்யவேண்டி இருக்கும்.

 

இப்பாடங்களுக்கான அலகுகள் யாவும் முதலாம் தொகுதிகள் (Modules),  இரண்டாம் தொகுதிகள் என பிரித்து முதலாம் தொகுதி 2ம் தவணையிலும் இரண்டாம் தொகுதி 3ம் தவணையிலும் கற்பிக்கப்படும்.

பிரயோக பாடங்களில் உள்ளடங்கும் தொழில் பாடங்களாவன.

குழந்தை உளவியல் மற்றும் பராமரிப்பு (Child Psychology & Care)
உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்பு  (Health & Social Care)
உடற்கல்வி மற்றும் விளையாட்டு (Physical Education & Sports)
கலை மற்றும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு (Performing Arts)
நிகழ்ச்சி முகாமைத்துவம்  (Event Management)
கலை மற்றும் கைவினை வடிவமைப்பு (Art & Designing)
உள்ளக வடிவமைப்பு (Interior Designing)
நவநாகரிக ஆடை வடிவமைப்பு (Fashion Designing)
கிராபிக் வடிவமைப்பு (Graphic Designing)
கலை மற்றும் கைவினை வடிவமைப்பு  (Art & Crafts)
தரை வடிவமைப்பு (Landscaping)
தோட்டக்கலை விவசாய கற்கைகள் (Applied Horticulture Studies)
கால்நடை உற்பத்திக் கற்கைகள்  (Livestock Product Studies)
உணவு பதப்படுத்தல் கற்கைகள்(Food Processing Studies)
நீர்வளக் கற்கைகள் (Aquatic Resource Studies)
பெருந்தோட்ட உற்பத்திக் கற்கைகள் (Plantation Product Studies)
கட்டுமானத் தொழில்நுட்பக் கற்கைகள் (Construction Studies)
மோட்டார் வாகன தொழில்நுட்பக் கற்கைகள் (Automobile Studies)
மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கற்கைகள் (Electrical Electronic Studies)
நெசவு மற்றும் ஆடை வடிவமைப்புக் கற்கைகள் (Textile & Apparel Studies)
உலோக புனைவுக் கற்கைகள் (Metal Fabrication Studies)
அலுமினியக் புனைவுக் கற்கைகள் (Aluminium Fabrication Studies)
உற்பத்திமுறையியல் கற்கைகள்  (Manufacturing)
கணினி வன்பொருள்மற்றும் வலையமைப்பு (Computer Hardware and Networking)
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்  (Tourism & Hospitality management)
சுற்றாடல் கற்கைகள் (Environmental Studies)
இடப்பெயர்வு மேலாண்மை கற்கைகள் (Logistics studies)
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகள் (Sales and marketing studies)

தரம் 13 தவணைகள் அடிப்படையில் பிரிக்கப்படுவதில்லை. மாணவர்கள் ஒருவருட கால அளவினை கொண்ட கல்வி நடவடிக்கைக்காக மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களில் இணைப்புச் செய்யப்படுவர். குறித்த நிலையத்தில் இணைப்புச் செய்யப்படும் மாணவர்கள் தாம் தரம் 12ல் தெரிவு செய்த 3 தொழில் பாடங்களில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு தொழில்க்கல்வியினை தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தெரிவு செய்த தொழில் கல்வி மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் உபகற்கை நெறிகளில் ஏதேனும் ஒன்றினை தெரிவு செய்வதனூடாக குறித்த கற்கைநெறியினை வழங்கும் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனத்துக்கு மாணவர்கள் இணைப்புச்செய்யப்படுவர். குறித்த கற்கை நெறியானது இரு கட்டங்களை கொண்டதாக அமையும். கற்கை நெறி தொடர்பான கற்பித்தல் செயற்பாடுகள் முதற்கட்டமாக இடம்பெறும். அடுத்த கட்டமாக தொழிற்யிற்சிக்காக (OJT) மாணவர்கள் கற்ற கற்கை நெறிக்கு பொருத்தமான தொழில் நிலையங்களில் இணைப்புச் செய்யப்படுவர். மாணவர்களின் OJTஇணை NAITA நிறுவனத்தின் மூலம் மேற்பார்வை செய்யப்பட்டு OJTஇணை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு NVQ level 4 பரீட்சை  இடம்பெறும். சித்தியடையும் மாணவர்களுக்கு NVQ level சான்றிதழுடன் OJT சான்றிதழும் வழங்கப்படும்.

தொழிற்கல்விகளுக்கு தெரிவு செய்யக்கூடிய உபபாடக்கற்கைகள் பின்வருமாறு 

குழந்தை உளவியல் மற்றும் பராமரிப்பு (Child Psychology & Care)
Child care 
Child care center operator 
Caregiver
Caregiver for special needs

உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்பு  (Health & Social Care)
Caregiver

உடற்கல்வி மற்றும் விளையாட்டு (Physical Education & Sports)
Physical Fitness Trainer
Surf Lifeguard
Scuba Diving
Sports Masseur

கலை மற்றும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு (Performing Arts)
Make up Artist 
Presenter
Dancing (Kandyan) 
Dancing (Bharatham)
Music (Eastern) 
Music ( Western)
Music (Karnatic)

நிகழ்ச்சி முகாமைத்துவம்  (Event Management)
Event Operation
Presenter
Beautician
Bridal Dresser
Makeup Artist
Hair Dresser

கலை மற்றும் கைவினை வடிவமைப்பு (Art & Designing)
Gem Design Technician
Jewellery Maker
Leather Product Craftsman
Wood Carving Artist
Wood Craftsman 
Batik Crafts Mat Crafts
Palmyra Craft 
Cane Craft
Rush and Reed
Footwear Craftsman
Hand loom Craftsman

உள்ளக வடிவமைப்பு (Interior Designing)
Interior Decorator

நவநாகரிக ஆடை வடிவமைப்பு (Fashion Designing)
Pattern Maker
Fashion Designer
Production Supervisor (Sewing)
Tailor

கிராபிக் வடிவமைப்பு (Graphic Designing)
Graphic Decorator

கலை மற்றும் கைவினை வடிவமைப்பு  (Art & Crafts)
Gem Design Technician
Jewellery Maker
Leather Product Craftsman
Wood Carving Artist
Wood Craftsman 
Batik Crafts Mat Crafts
Palmyra Craft 
Cane Craft
Rush and Reed
Footwear Craftsman
Hand loom Craftsman

தரை வடிவமைப்பு (Landscaping)
Landscape Development Assistant
Plant Nursery Development Assistant 

தோட்டக்கலை விவசாய கற்கைகள் (Applied Horticulture Studies)
Plant Nursery Development Assistant 
Agriculture Field Assistant

கால்நடை உற்பத்திக் கற்கைகள்  (Livestock Product Studies)
Agriculture Field Assistant

உணவு பதப்படுத்தல் கற்கைகள்(Food Processing Studies)
Baker
Cake Decorator
Fruit and Vegetable Processor

நீர்வளக் கற்கைகள் (Aquatic Resource Studies)
Aquaculture Technician
Fishing Vessel Skipper

பெருந்தோட்ட உற்பத்திக் கற்கைகள் (Plantation Product Studies)
Field Assistant (Tea)
Factory Assistant (Tea)
Field Assistant (Rubber)
Assistant Factory Assistant (Rubber)
Field Assistant (Coconut)
Field Assistant (Cashew)
Field Assistant (Cinnamon)

கட்டுமானத் தொழில்நுட்பக் கற்கைகள் (Construction Studies)
Construction Craftsman (masonry)
Tiler
Plumber
Construction Site Supervisor
Drafts person 
Wood Craftsman (Building)
Construction Equipment Operator
Construction Equipment Mechanic
Domestic Plumber

மோட்டார் வாகன தொழில்நுட்பக் கற்கைகள் (Automobile Studies)
Automobile Air Conditioning Mechanic
Automobile Electrician
Automobile Mechanic
Automobile Painter 
Automobile Tinker
Motorbike and Three wheel Mechanic
Agri Equipment Mechanic
Lithe Machine Operator 
Heavy Vehicle Operators
Boat building Technician 
Reefer Container Technicians 
Outboard Motor Mechanic

மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பக் கற்கைகள் (Electrical Electronic Studies)
Electrical Motor Winder
Electrical Appliance Maintenance Technician
Electrician
Pneumatic Technician 
Solar Photovoltaic Systems Technician 
Automobile Electrician
Hydraulic Technician
Electronic Appliance Technician
Industrial Mechanics Technician
Mobile Phone Repair Technician 
Security and Surveillance System Technician
Radio, TV, and Allied Equipment Repairer

நெசவு மற்றும் ஆடை வடிவமைப்புக் கற்கைகள் (Textile & Apparel Studies)
Tailor
Industrial Sewing Machine Operator
Sewing Machine Mechanic
Quality Controller (Apparel Production)
Production Supervisor (Sewing)
Work Study Officer

உலோக புனைவுக் கற்கைகள் (Metal Fabrication Studies)
Welder
Fabricator (Metal)
Fitter (General)
Machinist

அலுமினியக் புனைவுக் கற்கைகள் (Aluminium Fabrication Studies)
Fabricator (Aluminium)
Aluminium Fabricator and interior Designer

உற்பத்திமுறையியல் கற்கைகள்  (Manufacturing)
Plastic Processing Machine Operator
Rubber Processing Machine Operator 
Upholsterer 
Refrigeration and Air Conditioning Mechanic/ Technician
Reefer Container Technician

கணினி வன்பொருள்மற்றும் வலையமைப்பு (Computer Hardware and Networking)
Computer Hardware Technician
Computer Network Technician

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்  (Tourism & Hospitality management)
Cook
Waiter
Front Office Operation
Stewart/ Waiter
Food and Beverage
Professional Cookery
Housekeeper
Guest Relations Agent

சுற்றாடல் கற்கைகள் (Environmental Studies)
Vehicle Emission Testing
Recycling Assistant 
Solar Photovoltaic Systems Technician

இடப்பெயர்வு மேலாண்மை கற்கைகள் (Logistics studies)
Store Keeper
Wharf Clerk 
Warehouse Supervisor
Shipyard Supervisor

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகள் (Sales and marketing studies)
Sales Representative
Sales Assistant
Sales Assistant (Automobile)

 

பின்வரும் இணைப்பின் மூலம் தொழிற்கல்விக்கு மாணவர்கள் இணைப்பு செய்யப்படும் கற்கைநெறிகளின் NVQ மட்டங்கள், அம்  மட்டங்கள் கொண்ட கற்கை நெறிகள் காணப்படும் நிறுவனங்கள், அவற்றின் கிளைகள், குறித்த கற்கைநெறியில் பெறக்கூடிய அதியுயர் NVQ மட்டம் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
http://www.tvec.gov.lk/

குறித்த கற்கை நெறியினை தொடரும் மாணவர்களுக்கு கல்வியமைச்சினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கற்றலில் பல்வேறு இடர்பாடுகளை கொண்ட மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு கற்பித்தல் செயற்பாடுகளுள் பெரும்பான்மையானவை செய்முறை கற்பித்தலாகவே பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த செய்முறைக்கற்பித்தல்களை மேற்கொள்ள கூடிய வகையிலான பாடசாலைகளுக்கு Smart Class Rooms வழங்கப்பட்டுள்ளது. மேலும்  பாடசாலைகளுக்கான இணைய வசதிகள், Computer laboratory, Subject Related equipment, VR kits போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களில் இணைப்பு செய்யப்படும் காலம் தொடக்கம் OJT முடிவடையும் வரை மாணவர்களுக்கு நாளொன்றுக்கான வருகைக்கு 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மேலும் பாடசாலையில் இணையும் தினத்திலிருந்து SURAKSHA காப்புறுதி உரித்தும் உடையவர்களாக கருதப்படுவர். BUS மூலம் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கான பருவகால சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும் பாடசாலைகள் மூலம் சலுகை வழங்கப்படுகின்றன. NVQ சான்றிதழினைப்பெறும் மாணவர்களுக்கான சுயதொழில் கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கான முன்னுரிமை மற்றும் உயர் ஊதியத்தினை கொண்ட நாடுகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத்தவறும்  மாணவர்களிற்கு தமது எதிர்காலத்தினை தீர்மானித்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தினை கல்வியமைச்சு வழங்கியுள்ளது. வாய்ப்புக்களை தவறவிடுபவர்கள் வாழ்க்கையை தவறவிடுகின்றார்கள் எனவே வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி வெற்றியடைவோம்.

நன்றி
A. Ravinath
M.Sc in Sports Sciences.
Teacher
V/Gamini National School Vavuniya.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×