
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடாத்தப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாக்கள் 3 முன்கூட்டியே வெளியான குற்றச்சாட்டின் படி, மீண்டும் பரீட்சையை நடாத்துவதற்கான கோரிக்கைகளை அடுத்து இடம்பெற்ற விசாரணையின் பின்னர் பரீட்சைத் திணைக்களம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
மீண்டும் பரீட்சை நடாத்தப்படமாட்டாது என்பதோடு, வெளியாகிய மூன்று வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.