செய்தி
ஆசிரியர்களுக்கான மொடியுல் – புதிய அறிவிப்பு
ஆசிரியர்களின் தடைதாண்டல் மொடியுல் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுவரை மொடியுல்களை முடிக்காத ஆசிரியர்களின் தடைதாண்டல் சலுகைக் காலம் வழங்குவது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதால், அவ்வாறான ஆசிரயிர்களின் சம்பள உயர்வை தடுப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தடைதாண்டல் மொடியுல் தொடர்பான திருத்தங்களுடன் புதிய அமைப்பு ஒன்று 2025.07.01 முதல் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பாக விரைவில் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.