கட்டுரை

வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவனை இனங்காணல்

வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவனை இனங்காணல்

நோக்கம் :

  1. முகாமைத்துவ எண்ணக்கருவை வரைவிலக்கணப்படுத்தி பயன்மிக்க வகுப்பறைச் செயற்பாடுகளை இனம்காணல்.
  2. ஆசிரியர் , வகுப்பறைப் பிரயோகத்தினை ஆசிரியர் , மாணவர் இரு பிரிவினரும் விருப்பம் உண்டாகும் விதத்தில் பயன்படுத்தல்.
  3. பல்வேறு வயது மட்டங்களுக்குரிய மாணவர்களின் குணவியல்புகளை இனங்காணல்.
  4. மாணவனும் சூழலும், சிறுவர் விருத்தி மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு சிறுவர் நடத்தைகளை இனம்காணும் முறைகளைப் பயன் படுத்தல்.
  5. வகுப்பறையினுள் மாணவர்களிடமிருந்து வெளிப்படுத்துகின்ற சவாலான நடத்தைப் பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்தல்.

வகுப்பறை முகாமைத்துவம்

வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பாக கீழ் குறிப்பிடப்படும் உப தலைப்புக்களின் கீழ் அவதானம் செலுத்தவும், முகாமைத்துவம் செய்யும் வழிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 1.1. முகாமைத்துவம் என்றால் என்ன? 1.2. முகாமைத்துவம் பற்றிய வரைவிலக்கணம் 1.3. முகாமைத்துவ வழிமுறை செயன்முறை 1.4. வகுப்பறை முகாமைத்துவ செயன்முறை 1.5. வகுப்பறை முகாமைத்துவ வரைவிலக்கணம் 1.5. வகுப்பறை முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் 1.7. வகுப்பறை முகாமையாளர் என்ற வகையில் ஆசிரியரின் வகிபாகம் 1.7.1. திட்டமிடல் 1.7.2 ஒழுங்கமைத்தல் 1.7.3. தலைமை வகித்தல் 1.7.4. கட்டுப்படுத்தல் 1.8. சிறந்த வகுப்பறையின் பண்புகள் 1.9. வகுப்பறையின் முகாமைத்துவம் வகுப்பறை நிலைமை 1.10. வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் 1:11. பிரச்சினைகளுக்கு தீர்வுகள்

அறிமுகம்

முகாமைத்துவத்தை அடிப்படையில் சமூக செயற்பாடொன்றாக இனங்காண முடியும். சமூகம் எப்பொழுதும் மாற்றங்களுக்கு உட்படுவதால் சமூக நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட வளங்களை விளைதிறனுடனும் வினைதிறனுடனும் பயன்படுத்த வேண்டியுள்ளது. முகாமைத்துவத்தின் போது சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக திட்டமிடுதல், வளங்கள் ஒழுங்கமைப்பு, நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டின் ஊடாக வினைதிறனை நோக்கி வழிநடாத்தப்படுவர். கல்வியின் முக்கிய கேந்திரதலமாகிய வகுப்பறைச் செயற்பாடுகள் வெற்றியடைய வேண்டுமாயின் ஆசிரியர்கள் வகுப்பறையினுள் முகாமைத்துவத் தேர்ச்சியை விருத்தி செய்து கொள்ளல் வேண்டும். அதன் பிரகாரம் வகுப்பறையினுள் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய முகாமைத்துவத் தேர்ச்சிகளை இனங்காணுதல் முக்கியமாகும். வேகமாக மாற்றமடையும் உலகில் பிள்ளைகளை நாளைய உலகிற்கு ஆயத்தம் செய்யும் போது ஆசிரியர்களுக்கான பிரதான சவாலானது அறியாத உலகிற்கு அறியாத பிள்ளைகளை The unknown children for an unknown world ஆயத்தம் செய்வதாகும். கல்வியின் சகல இலக்குகளும் மையப்படுத்தப்படுவது பிள்ளைக்காகும். எனவே பிள்ளையை இனங்கண்டு வெற்றிகரமான கற்றலை சகல பிள்ளைகளுக்கும் வழங்குவதை எதிர்பார்க்கப்படுகின்றது. சகல பிள்ளைகளும் கல்வியைப் பெறுவது மனித உரிமையொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தர்மமாகும்.

1.1 முகாமைத்துவம் என்றால் என்ன?

முகாமையானது ஊழியர்களைக் கொண்டு கருமங்களைச் செய்விப்பது முகாமைத்துவ கலையாகும். மேலும், முகாமைத்துவம் என்பது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் செயன்முறைகளை உள்ளடக்கிய ஓர் ஒழுங்கு ஆகும்.

1.2 முகாமைத்துவம் பற்றிய வரைவிலக்கணம்.

James A Stoner – 1960முகாமைத்துவம் என்பது நிறுவனமொன்றின் நோக்கங்களை வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் அடைந்து கொள்வதற்காக மனித, நிதி, பௌதிக, தகவல்  வளங்களை திட்டமிடுதல்,  ஒழுங்கமைத்தல், வழிநடத்தல் அல்லது தலைமை தாங்குதல் மற்றும் கட்டுப்படுத்தல் செயற்பாடு ஆகும். Brekeமுகாமைத்துவம் ஆனது ஏதேனும் அமைப்பின் நிறுவனத்தின் குறித்த நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்து கொள்வதற்காக அதன் செயற்பாடுகளை விளைதிறன் மிக்கதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் கையாளும் சமூகச் செயற்பாடாகும். Mary Parker Follet – 1868ஊழியர்களை கொண்டு கருமங்களை ஆட்டுவிக்கும் செயற்பாடே முகாமைத்துவம் ஆகும். Rose Marystward- 1963முகாமைத்துவம் என்பது செய்யவேண்டியவை எவை எனத் தீர்மானிப்பதும், அத்தீர்மாணங்களை ஏனையோரைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதுமாகும். Sawad – 1975முகாமைத்துவம் என்பது, குறித்த குறிக்கோளை அடைவதற்காக பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதாகும். Donald Callasபொது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக மனிதர்கள் கூட்டாக கடமையாற்றி முறையாக வழிப்படுத்தப்படும் கலையே முகாமைத்துவமாகும். Robert Creamkerமாறிவரும் சூழலினுள் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஏனையோரைக் கொண்டு கருமமாற்றுதல் அகும்.

1.3. முகாமைத்துவ வழிமுறை செயன்முறை

முகாமைத்துவ செயற்பாடுகள் ஒன்றோடொன்று கொடர்பான பல விடயங்களை உள்ளடக்கியதாகும். முகாமைத்துவத்திற்கு முக்கியமான அடிப்படை விடயங்கள் மற்றும் முக்கியமான விடயத்தை மெய்யியலாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவேறு வகை வகைப்படுத்திக் கூறியுள்ளனர். அடிப்படை விடயங்கள் 7 என லூதர் கயூலிக் குறிப்பிடுகிறார். அவை தட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிப்படுத்தல், தொடர்பாடல், அறிக்கைப்படுத்தல் மற்றும் வரவுசெலசுவுக்குட்படுத்தல் என்பனவாகும். ஸ்டேனர் என்பவர் அவை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வற்புறுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் எனக் கூறியுள்ளார். தற்காலத்தில் அதிகமான முகாமையாளர்கள் மற்றும் மெய்யியலாளர்கள் முகாமைத்துவ விடயங்களை 4ஆக சேர்த்துள்ளனர். அவை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், தலைமைத்துவமுண்டாக்கல் மற்றும் நிர்வகித்தல் ஆகியனவாகும். இந்த அடிப்படை விடயங்கள் கல்விப்புலத்தில் வகுப்பறை முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன. முகாமைத்துவ செயல்முறை முகாமைத்துவ செயற்பாடுகள் ஒன்றோடொன்று கொடர்பான பல விடயங்களை உள்ளடக்கியதாகும். முகாமைத்துவத்திற்கு முக்கியமான அடிப்படை விடயங்கள் மற்றும் முக்கியமான விடயத்தை மெய்யியலாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவேறு வகை வகைப்படுத்திக் கூறியுள்ளனர். அடிப்படை விடயங்கள் 7 என லூதர் கயூலிக் குறிப்பிடுகிறார். அவை தட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிப்படுத்தல், தொடர்பாடல், அறிக்கைப்படுத்தல் மற்றும் வரவுசெலசுவுக்குட்படுத்தல் என்பனவாகும். ஸ்டேனர் என்பவர் அவை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வற்புறுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் எனக் கூறியுள்ளார். தற்காலத்தில் அதிகமான முகாமையாளர்கள் மற்றும் மெய்யியலாளர்கள் முகாமைத்துவ விடயங்களை 4ஆக சேர்த்துள்ளனர். அவை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், தலைமைத்துவமுண்டாக்கல் மற்றும் நிர்வகித்தல் ஆகியனவாகும். இந்த அடிப்படை விடயங்கள் கல்விப்புலத்தில் வகுப்பறை முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன.

வினைத்திறன் (Efficiency)   எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்து  கொள்ளy

விளைதிறன் (Effectiveness)காணப்படும் வளங்களின் உச்சப் பயனைப் பெறல்

 

  • P – Planning – திட்டமிடல்
  • O – Organizing – ஒழுங்கமைத்தல்
  • L – Leading – தலைமைத்துவமுண்டாக்கல்
  • C – Controlling –  கட்டுப்படுத்தல்

திட்டமிடல்

எதிர்பார்த்த பெறுபேற்றை அண்மித்துக்கொள்வதற்காக நிச்சயமற்றதன்மை தொடர்பான செயற்பாடுகளை கட்டியெழுப்பும் செயற்பாடே திட்ட மிடலாகும். இலக்கை அண்மிப்பதற்கு அதனூடாக வழிகாட்டப்படும். முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் ஆரம்ப விடயத்தை திட்டமிடுதலாகும். இதனால் ஏனைய முகாமைத்துவ விடயங்களுக்கு அடித்தளம் இடப்படும். திட்டமிடல் விடயத்தில் நோக்கங்களை உருவாக்கல், நோக்கங்களுக்குரிய தற்கால நிலைமையை நிச்சயித்தல், எதிர்கால நிலைமைகள் தொடர்பான எதிர்வுகூறல்களை வளப்படுத்தல், உபகார திட்டமிடலைத் தயாரித்தல், திட்டத்தை செயற்படுத்தல் மற்றும் பெறுபேற்றை மதிப்பிடுதல் இடம்பெறும். இறுதியில் உண்மையான பெறுபேற்றை எதிர்பார்க்கின்ற பெறுபேற்றுடன் ஒப்பிடுதல் வேண்டும்).

ஒழுங்கமைப்பு 

பொது இலக்கொன்றை அல்லது பல இலக்குகளை அண்மித்துக் கொள்வதற்காக மனிதர்கள் இருவரோ அல்லது கூடிய தொகையினரோ ஒற்றுமையாக ஒன்றாக வேலை செய்யும் செயற்பாடு ஒழுங்கமைப்பு எனப்படும். இலக்குகளை அண்மிக்கக் கூடியவாறு அமைப்பின் அங்கத்தவர்களிடையே வளங்களை பகிர்வு செய்யும் செயற்பாடும் இதில் அடங்கும். ஒழுங்கமைப்பின் போது நிறுவனமொன்றின் சகல நபர்களுக்கிடையிலும் உரிய விடயத்தின் பகுதி அல்லது அதிகாரம் சாட்டப்படும். நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஆட்களை இணைப்புச் செய்தல் மற்றும் அவர்களது உச்ச ஆற்றல்கள் மற்றும் முயற்சிகளைப் பெற்றுக்கொள்ளல் இருமுறை கணக்கெடுப்பதை தவிர்த்தல் மனித குழுக்களிடையே பிரச்சினைகளைக் குறைத்தல், வள நட்டத்தை தவிர்ப்பதற்கு இதன்மூலம் வாய்ப்புண்டாகும்.

தலைமைத்துவப்படுத்தல்

தலைமைத்துவம் என்பது “அமைப்பொன்றின் நோக்கங்களை அண்மித்துக் கொள்வதற்காக கீழ்ப்படிவோருக்கு அவர்களது கடமைகளை ஆயத்தத்துடனும் ஆற்றலுடனும் தேவையுடனும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அழுத்தம் கொடுக்கும் முறையாகும்.” இங்கு அடுத்தவர்களின் அலுவல்களை செய்து கொள்ளும் போது, அழுத்தம் உண்டாக்கும் போது கௌரவிப்பது மிக முக்கியமானது. தலைமைத்துவம் இரண்டு விதத்தில் கிடைக்கும். இந்த அதிகார பலத்துக்கு மேலதிகமாக அவரால் உள் ஆட் தொடர்பை பேனரிச் செல்லும் போது செய்ய முடியுமான அதிகாரம் முறைசாரா தலைமைத்துவமாகும். இறைமை மிக்க முகாமையாளர் ஒருவர் முறைசார் மற்றும் முறைசாரா தலைமைத்துவம் இரண்டையும் விளைதிறனுடையதாகப் பயன்படுத்துவார்.

சகல முகாமையாளர்களும் சிறந்த தலைவரொருவரின் பாத்திரத்தை வகித்தல் வேண்டும். இதற்காக பல்வேறு தலைமைத்துவக் கோட்பாடுகளிலே பல்வேறு தலைமைத்துவ முறைகளைக் கையாள்வர். தலைமைத்துவம் சந்தர்ப்பத்திற்கேற்ப இசைவடையக்கூடியதால் தமக்குக் கீழ் உள்ளவர்களின் ஆற்றல்கள், அனுபவங்களை அறிந்திருத்தல் வேண்டும். தலைமைத்துவப் பண்புகள் சர்வாதிகார, ஜனநாயக மற்றும் தாராண்மைவாத உருவங்களில் செயற்படுவதைக் காணமுடிகிறது. ஏகாதிபத்திய தலைவன் தாமே நிர்வாகம், மேற்பார்வை மற்றும் தீர்மானம் எடுத்தலை மேற்கொள்வான். அடுத்தவர்களைக் கூட்ட மாட்டான். ஜனநாயக தலைவன் அடுத்தவனுக்கு எப்பொழுதும் உதவி செய்யக்கூடிய, அதிகாரங்களை வழங்கக்கூடிய, தலைவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒருவனாகும். தாராண்மைவாத தலைவன் நிறுவனத்தை விட தனது பாதுகாப்பை பற்றி சிந்திப்பான். மட்டமாக கருமமாற்றி பொறுப்பிலிருந்து விலகப் பார்ப்பான். தேடிப்பார்த்தல் தேவையற்றது என எண்ணுவான்.

நிர்வாகம்

“உண்மையான பெறுபேறு எதிர்பார்த்த பெறுபேறுகளுக்கு இணைவானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் செயற்பாடு” நிர்வாகம் எனப்படும்.

நிறுவனத்தின் இலக்கிற்கு ஏற்ப செயற்படுமாறு அதன் அலுவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிர்வாக விடயத்தின் மூலம் இடம்பெறும். நவீன சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான நிர்வாக முறையாவது முழுமையான முகாமைத்துவமாகும். (வுழவயட ஞரயடவைல ஆயயெபநஅநவெ) முகாமையாளர்களால் நிர்வாக விடயங்களின் போது தொடர்பாடல் காலம் பற்றிய அவதானம் செலுத்தப்படல் வேண்டும். நிர்வாக விடயத்தின் போது நிறுவனம் எதிர்பார்க்கும் நிலைமைகள் மாறுபடுவதை இனங்கண்டு அவற்றை சரிப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். திட்டமிடலின் போது ஏற்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அலுவலகங்களில் தரத்தினை நிறுவுதல்.

நிர்வாகத்தினூடாக அமைப்பின் அலுவல்களை வினைதிறனுடன் நிறைவேற்றிக் கொள்ளல் தொடர்ச்சியாக, பண்புத்தரத்தினை உறுதிசெய்து கொண்டு நடாத்திச் செல்லல், போட்டி நிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தல், விரைவான சேவையொன்றைப் பெற்றுக்கொள்ளல், பெறுமானங்களை ஒன்று சேர்த்தல், தனியாள் மற்றும் குழுக்களின் விடயங்களது பயன்பாட்டை அளந்து கொள்ள முடியுமாதல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படும்.

நிர்வாக முறைகள் 3 ஆகும்.

  1. எதிர்கால போசணை நிர்வாகம் – பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்.
  2. நிகழ்கால நிர்வாகம் – தற்பொழுது ஏற்படும் அலுவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் திட்டமிடுதல்
  3. பிற்போசணை நிர்வாகம் – மாறிகளை இனங்கண்டதன் பின்பு காரணத்தைத் தேடி சரியான தீர்வை எடுத்தல்.

முகாமைத்துவம் என்பது POSDCORBலூதர் குலிக்

  • திட்டமிடல் (Planning) ….
  • ஒழுங்க மைத்தல் (Organizing) ….
  • ஆட்சேர்த்தல் (Staffing)
  • நெறிப்படுத்தல் (Directing)
  • ஒருங்கிணைத்தல் (Coordinating)
  • அறிக்கைப்படுத்தல் (Reporting)
  • வரவு செலவுக்குட்படுத்தல் (Budgeting)

ஆசிரியர் ஒரு முகாமையாளராவார்” பல் பரிமாணங்களைத் தழுவிய ஆசிரிய வகிபாகத்தின் முக்கியமானதொரு வகிபாகமாக முகாமைத்துவ வகிபாகம்காணப்படுகின்றது.” ஆசிரியருக்கு முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

  • பாடசாலை முகாமைத்துவத்திற்கு உதவ முடியுமாக இருத்தல்.
  • அதனூடாக தனது ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வளர்த்துக் கொள்ளல்.
  • எந்தவொரு செயலையோ, பிரச்சினையையோ குறித்து விரிவான கண்ணோட்டத்துடன் நோக்கி அதில் தலையிட்டுச் செயற்படமுடிதல்.
  • வினைத்திறனுடன் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு செயற்பட முடிதல்.
  • வினைத்திறனுடன் வளங்களைச் சிக்கனமாகவும், விரயமின்றியும், உச்சப்பயனைப் பெறும்வகையிலும் பயன்படுத்தல்.
  • சிந்தனைத்திறனின் மூலம் ஆசிரியர் மாணவருடன் கலந்து ரையாடி மேற்கூறப்பட்டவாறு நோக்கங்களை அடைய முடியும்.
  • கற்றல் – கற்பித்தல் முறைகளையும், துணைச் சாதனங் களையும் PODC செயன்முறையின் மூலம் முறையாகப் பிரயோகித்தல்.
  • ஒற்றுமையான மனிதச் செயற்பாடுகளால் அன்னியோன்ய தொடர்புகள் வளர்சியடைதல்.

1.4. வகுப்பறை முகாமைத்துவம் செயல்முறை

அறிமுகம்வகுப்பறை முகாமைத்துவம் என்பது, வகுப்பறையில் கற்றலும் கற்பித்தலும் அதிக விளைதிறனுடையவாறு நிகழத்தக்க சூழலைக் கட்டியெழுப்பவதற்கும். அதனை நடத்திச் செல்வதற்கும், அதற்குத் தேவையான மனித, பௌதிக, நேர வளங்களை வினைத்திறனுடையவாறு பயன்படுத்துவதற்குத் தேவையான உத்திகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியாகும். உங்கள் வகுப்பறையை இவ்வாறு ஒழுங்கமைத்து கொள்ளலாம்.

1.5. வகுப்பறை முகாமைத்துவம் பற்றிய வரைவிலக்கணம்

ஜோன்சன் மற்றும் பரூக் 1997“மாணவர்கள் உள்ள வகுப்பொன்றை சரியாக வழிநடாத்திச் செல்வது வகுப்பு முகாமைத்துவம் என அறிய முடியும். வகுப்பு முகாமைத்துவம் எனும் எண்ணக்கரு வகுப்பை நிர்வகித்தலை விட வேறுபட்ட விரிவான விடயமொன்றாகும். “நிர்வாகம்” என்பது முகாமைத்துவத்தில் ஓர் அம்சம் மாத்திரமாகும். எனினும் வகுப்பு முகாமைத்துவத்தில் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், வழிநடாத்தல், நிர்வகித்தல், தொடர்பாடல், வீட்டுநிர்வாகம், போசணை ஆகிய பல்வேறு முகாமைத்துவச் செயற்பாடுகளை மேற்கொள்ள நேரிடும்” கிப்ஸன் 1981“சிறந்த நடத்தைகளை ஏற்படுத்துவதன் மூலமும் மோசமான நடத்தைகளை இல்லாதொழிப்பதன் மூலமும் வகுப்பறைச் சூழலை செயல்படக்கூடியதாக நிர்வாகத்துக்கு உட்படுத்தும் செயற்பாடு வகுப்பறை முகாமைத்துவம் ஆகும்.”

1.6. வகுப்பறை முகாமைத்துவ செயற்பாட்டின் அவசியம்

வகுப்பறை முகாமைத்துவ செயற்பாட்டின் எதிர்பார்ப்புகள்

  1. ஆசிரிய – மாணவ, மாணவ- மாணவ தொடர்புகளை விரிவுபடுத்துதல்
  2. விளைதிறன் மிக்க கற்றல் கற்பித்தல் செயன்முறை
  3. மாணவர் ஆளுமைவிருத்திக்கான சந்தர்ப்பம்
  4. சுய ஒழுக்கத்தைக் கட்டியெழுப்புதல்
  5. உயிரோட்டமுள்ள விரும்பத்தகு கற்றல் சூழல்
  6. ஒருமைப்பாடு, ஒற்றுமை, சமாதானத்தை கட்டியெழுப்புதல், குழு உணர்வு
  7. வினைத்திறன் எனப்படும் வளங்களின் உச்சப் பயனைப் பெறல்
  8. மானிடம், கண்ணியம் தொடர்பான நடத்தைப் பயிற்சி
  9. மாணவனை சுய செயற்பாட்டுக்கு தூண்டுதல்
  10. பரஸ்பர ஆளிடைத் தொடர்புகளை விருத்தி செய்தல்
  • மாணவனுக்கும் ஆசிரியருக்கும் விருப்பத்துக்குரிய ஓர் இடமாகவும் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை அடையத்தக்கவாறான ஓர் இடமா கவும் ஊக்கலுடன் செயற்படத்தக்க ஒரு சூழ்நிலையைக் கொண்ட ஓர் இடமாகவும் வகுப்பறையை மாற்றியமைப்பதற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும்.
  • சாதகமான நடத்தைகளை மீள வலியுறுத்துவதன் மூலமும் பாதகமான நடத்தைகளை நீக்குவதன் மூலமும் வகுப்பறைச் சூழலைப் பேணி வருதலே வகுப்பறை முகாமைத்துவமாகும்.
  • மாணவரது கவனத்தைப் பேணுவதோடுஇ அவர்களுக்கு ஊக்கமளிதது அவர்களது அக்கத்திறன் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல்களை மேம்படுத் திக்கொள்ளலை இலகுபடுத்தத்தக்க வகையில் வகுப்பறையில் பௌதீகஇ மானுட சூழ்நிலையை ஒழுங்கமைப்பதாகும்.

1.7. வகுப்பறை முகாமையாளர் என்ற வகையில் ஆசிரியரின் வகிபாகம்

  • வகுப்பறை முகாமை செய்தல்.
  • ஆழகிய சூழலுள்ள வகுப்பறையைப் பேணல்
  • வகுப்பறையின் அன்றாட நடவடிக்கைகளின் முகாமைத்துவம் செய்தல்.
  • வகுப்பு நேரசூசி நடைமுறைப்படுத்ததல்.
  • வகுப்பு சார்ந்த ஆவணங்களை பராமரித்தல்.
  • காலைக்கூட்டம், உடற்பயிற்சி என்பவற்றில் மாணவரைப் பங்குபற்றச் செய்தல்
  • வகுப்பறைக்கு வரும் பாடப்பொறுப்பு ஆசிரியர்களின் பணிகளுக்கு உதவுதல்
  • வகுப்பறை நிருவாகச்சட்ட திட்டங்கள் தொடர்பாக தர இணைப் பாளர்கள், பகுதித்தலைவர்களுடன் இணைப்பாக்கம் செய்தல்
  • வகுப்பறைத்தலைவர், பாடத்தலைவரின் பணிகளை முறையாக முகாமை செய்தல்
  • மாணவரின் முழுமையான விருத்திக்காக பெற்றோரின் ஒத்துழைப் பைப் பெறல்.
  • குறித்த வருடத்தில் மாணவரின் முழுமையான முன்னேற்றத்தை மதிப்பிடல் வகுப்பு வட்டங்களை நடாத்துதல்.

வகுப்பறை முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

  • முதன்மையாக எதிர்பாரக்கப்படும் குறிக்கோள்களை அடையத்தக்கதாக இருத்தல்
  • வேண்டும்.
  • வினைத்திறன் அதாவது கற்றல் கற்பித்தல் செயன்முறையின் குறிக்கோளை அடைதல்.
  • மனித கௌரவம் தொடர்பான நடத்தைப் பயிற்சிக்கு உதவுதல்.
  • ஓற்றுமை, கூட்டுணர்வைக் கட்டியெழுப்புதல்
  • மாணவர்களைத் தாமாகவே தமது வேலைகளைச் செய்துகொள்ளவதற்கு வழிப்படுத்தல்.
  • வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு தொடர்பான உணர்வைப் பயிற்றுவித்தலும் அனுபவங்களை வழங்குதல்.
  • ஆசிரியர் – மாணவர், மாணவர் – மாணவர் தொடர்புகளையும் சிறப்பாகக் கட்டியெழுப்புதல்.

வகுப்பறை முகாமையாளர் என்ற வகையில் அசிரியரின் வகுப்பறை முகாமைத்துவப் பணிகள்.P – திட்டமிடல் — PlanningO – ஒழுங்கமைத்தல் — Organizing D – நெறிப்படுத்தல் — DirectingC – கட்டுப்படுத்தல் — Controlling

திட்டமிடல் – Planning

திட்டமிடல் என்பது எந்தவொரு பணியினதும் நோக்கத்தை தீர்மானிக்கவும், அந்நோக்கங்களை அடையவும் தேவையான உபாயங்களையும் வளங்களையும் தீர்மானித்தலாகும். அதற்கிணங்க, ஆசிரியரானவர்,

  • பாடத்தைத் திட்டமிடல்
  • கற்றல் – கற்பித்தல் செயன்முறையைச் சரியாகத் திட்டமிடல்.
  • மாணவர் செயறப்hடுகளையும் மாணவர் முன்னேற்றத்திற்கான பணிகளையும் திட்டமிடல்
  • மாணவர் மதிப்பீடு / பரீட்சைகளைத் திட்டமிடல்
  • ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை அபிவிருத்திக்குமான செயற்றிட்டங்களை மேற்கொள்ளல்.

போன்ற பணிகளின் போது திட்டமிடல் முக்கியம் பெறுவதுடன் திட்டமிடலின் அடிப்படை அம்சங்களாகிய குறிககோள்களைத் தீர்மானித்தல், குறிக்கோள் களை அடைவதற்கான முறைகள் மற்றும் தேவையான வளங்களைத் தீர்மா னித்தல் என்பவை முக்கியமானவை.

வகுப்பறை மட்டத்தில் குறிக்கோள்ளைத் தீர்மானிக்கும்போது (திட்டமிடலுக்காக) பின்வரும் காரணிகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டியன.

  1. கலைத்திட்டம்:- சுற்று நிருபங்கள், பாடத்திட்டங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள், பாடநூல்கள் , மேலதிக வாசிப்பு நூல்கள், போன்றவை குறித்து கவனம் செலுத்துதல்.
  2. பிள்ளை:- பிள்ளையை இனங்காணல் தொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிடல்
  3. சமூக எதிர்பார்ப்புகள்:- சமூதாயம் பாடசாலையிலிருந்து எதிர்பார்ப்பவை, பாட சாலை சமூதயத்திடமிருந்து எதிர்பார்ப்பவை, சமூதாயத்தினரின் மனப்பாங்குகள் போன்றவை
  4. பாடசாலையிலுள்ள வளங்கள்:- மனித வளங்கள் தொடர்பான தகவல்கள், பௌதீக வளங்கள் தொடர்பான தகவலகள், நேரம் அல்லது வளங்கள் தொடர்பான தகவல்கள்
  5. ஆசிரியர் தொடர்பாக:-
  • கற்றல் கற்பித்தல் செயன்முறைக்குத் தேவையான திறன்கள், – உள்ளார்ந்த அறிவு ஆற்றல்களைக் கவனத்தில் கொள்ளல்.
  • நல்ல ஆசிரியரொருவரிடத்தே காணப்பட வேண்டிய இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துதல். பிரச்சினை தீர்த்தல், முகமைத்துவம் போன்றவை
  • ஆசிரியரது திறன்கள் தொடர்பாகக் கவனம் செலுத்துதல். (எண்ணக்கரு சார்ந்தவை, தொடர்பாடல், தொழிநுட்பம், மானுடத் தொடர்புகள், திறன்கள்.

6. பாடங்கள் தொடர்பாக 

  1. பூர்த்தி செய்ய வேண்டிய பாட அலகுகளைத் திட்டமிடல்.
  2. பாடவேலைத்திட்டம், செயற்பாட்டுத்திட்டம், தினக்குறிப்பு போன்ற
  3. வற்றை திட்டமிடலும் முறையாகப் பேணலும்.
  4. கற்பித்தல் முறைகள் தொடர்பான திட்டமிட்டுச் செயற்படல்.
  5. கணிப்பீடு, பின்னூட்டல், பரிகார நடவடிக்கைகளைத் திட்டமிடல்.
  6. வகுப்பு வட்டங்களைத் திட்டமிடல்.
  7. தவணைப் பரீட்சை நடவடிக்கைகளைத் திட்டமிடல்.
  8. மாணவருக்கு ஒப்படைக்கப்படும் வீட்டு வேலைகள், மேலதிக வேலைகள், தேடல் போன்றவைகளை திட்டமிடல்.

7. இணைப்பாடவிதான வேலைகளைத் திட்டமிடுவது தொடர்பாக

  • பொருத்தமான வித்தில் இணைப்பாடவிதான வேலைகளையும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். (உதாரணமாக – விளையாட்டு விழா, கண்காட்சிகள். கல்விச்சுற்றுலாக்கள், பாடதினங்கள் நடாத்துதல் போன்றவை)

ஒழுங்கமைத்தல் – Organizing

பொது இலக்கொன்றை அல்லது பல்வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்காக மனிதர்கள் இருவரோ அல்லது கூடிய தொகையினரோ ஒற்றுமயாக ஒன்றாக வேலை செய்யும் செயற்பாடு ஒழுங்கமைப்பு எனப்படும். இலக்குகளை அடையக் கூடியவாறு அமைப்பின் அங்கத்தவர்களிடையே வளங்களை பகிர்வு செய்யும் செயற்பாடும் இதிலடங்கும். ஆசிரியர் தாம் ஒழுங்குசெய்த திட்டத்தை வெற்றிகரமாக நடை முறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கிக் கொள்வதே ஒழுங்கமைப்பு எனப்படுகிறது. ஒழுங்கமைப்பின்போது கவனம் செலுத்தவேண்டிய விடயங்களாவன,

  1. பௌதிகச் சூழலை தயார்படுத்தல் :இடவசதி,சுத்தம் ஒளியூட்டம், காற்றோட்டம், தளபாடங்கள், கற்றல் சாதனங்கள், மாணவரது ஆக்கங்கள் போன்றவை
  2. வகுப்பறை நியமங்கள், ஒழுங்குமுறைகள் பிரமாணங்கள், போன்றவை தொடர்பாக (உதாரணமாக பாடசாலை ஆரம்பம், பாடவேளை தொடங்குதல், பாடவேளைகள் முடிவடைதல், வகுப்பறைச் செயன்முறைகள் தொடர்பான பல்வேறு நடத்தைகள் தொடர்பான அங்கீகரிப்பு.

உதாரணமாக:

  • பாடத்திட்டம்,
  • பாடநூல்கள்,
  • காலம்,
  • ஆசிரியர் வழிகாட்டி,
  • கற்றல் உபகரணங்கள்,
  • மாணவர் பங்குபற்றலுக்கான ஒழுங்கமைப்பு,
  • பௌதிக வளங்கள்,
  • ஆலோசனை,
  • நிதி வளம் என்பவற்றை ஒழுங்கமைத்து கொள்ளல்.

நெறிப்படுத்தல் – Directing

தாம் திட்டமிட்டு ஒழுங்கமைத்த பணிகளை நடைமறைப் படுத்துவதற்கான பொருத்தமான தலைமைததுவம் வழங்குதல், அப்பணிக்காக நெறிப்படுத்தல், அறிவுறுத்தல்கள் வழங்குதல் நெறிப்படுத்தல் என்பதால் கருதப்படுகிறது. • திட்டங்கள், குறிக்கோள்கள் மற்றும் தரீமாணஙக்ள் தொடர்பாக அறிவித்தல்,அறிவூட்டம் செய்தல், பயிறசி போன்றவை. . ஓப்படைக்கப்பட்ட பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்குதல், மேறப்பார்வை செய்தல், மதிப்பிடல் போனற்வை.

  • ஆட்களின் பல்வகைமை, மற்றும் வேறுபாடுகளின் படி பணிகளை ஒப்படைத்தல்.
  • மாணவர்களின் தனித்தன்மைகளை இனங்கண்டு பணிகளை வழங்கல்
  • சகலருக்கும் சநத்ர்ப்பமளித்தல்.
  • நடத்தைகளை மீளவலிறுத்தல் அல்லது களைதல்.
  • நெருக்கடி நிலைமைகளின் போது தீர்மானம் எடுத்தல், அவற்றைத் தணித்தல்.

நெறிப்படுத்தல் தொடர்பாக வகுப்புத் தலைவர், பாடத்தலைவர் போன்ற வகுப்பறையின் ஒழுங் கமைப்புக் கட்டமைப்பு பாடஇணை மற்றும் பாடப்புற நடவடிக்கை கள் போன்றவற்றை நன்கு ஒழுங்கமைத்தல். வகுப்பறைத் தலைமைத்துவ வகிபாகம்: உதாரணம் :-

  • தலைமைத்துவத்திற்குச் சந்தர்ப்பமளித்தல்,
  • பொறுப்புக்களை மேற்பார்வை செய்தல்,
  • தேடியறிதல் போன்றவை.
  • வகுப்பறையினுள் சமூகத் தொடர்புக் கோலங்கள்.
  • மாணவர் – மாணவர், அசிரியர் – மாணவர்,
  • சமூகமான சோதனைகள், ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கைகள்.

மாணவரது பணிகளை நெறிப்படுத்தல் 

  • அடைவை மேம்படுத்துவதற்கான தலைமைத்துவம் வழங்குதல்.
  • பிள்ளையை பெயர் கூறி அழைத்தல்.
  • தொடர்பாடல் செயன்முறை
  • மாணவரை ஊக்குவித்தல்
  • பெற்றோருக்கு அறிவூட்டம் செய்தல்

கட்டுப்படுத்தல் –  Controlling

  • வகுப்பறை முகாமைத்துவ செயன்முறையின் இறுதி அம்சம் கட்டுப்படுத்த லாகும். வகுப்பறை முகாமைத்துவச் செயன்முறைக்குரிய மேற்பார்வை, முடிவு, மதிப்பீடு ஆகிய பணிகள் தொடர்பான முனனேற்றக் கட்டுப்பாட்டுச் செயன்முறையே கட்டுப்பாடு என்பதால் கருதப்படுகிறது.
  • அதற்கமைய ஆசிரியர்கள் பின்வரும் அடிப்பைடையான பணிகள் தொடர்பாக தேடியறிதல் வேண்டும்.
  • திட்டமிட்டதற்கமைய, பாட மற்றும் பாடஇணைச் செயற்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா?
  • திட்டமிட்டதற்கமைய குறிக்கோள்கள், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் அடையப் பெற்றுள்ளனவா?
  • திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்துள், இடையிடையே முன்னேற்றத் தைத் தேடியறிந்து அறிக்கைகளைப் பேணிவருதல் வேண்டும்.
  • இடையிடையேயும் இறுதியிலும் மதிப்பிடல்

கட்டுப்படுத்தல் மூன்று வகைப்படும்.

  • முன்னோக்கிய கட்டுப்படுத்தல் – பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • தோழமை கட்டுப்படுத்தல் – நிகழ்கால செயல்கள் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடல்.
  • பின்னூட்டல் கட்டுப்படுத்தல் – வேறுபாடுகளை இனங்கண்டு அதற்கான காரணங்களை அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

ஆசிரியர்களின் முகாமைத்துவப்பணி

  1. பாடவிதான வேலைகள்
  2. இணைப்பாடவிதான வேலைகள்
  3. நிறுவன அபிவிருத்தி வேலைகள்
  4. தொழில் அபிவிருத்தி வேலைகள்
  5. வகுப்பாசிரியர் கடமைகள் பொறுப்புகள்
  6. மேற்பார்வை பாடவிதான இணைப்பாளராக
  7. மாணவருடனான உறவுகள்
  8. மாணவரை கற்கத் தூண்டுதல்
  9. வழிகாட்டல்
  10. ஆலோசனை முகாமை
  11. பொற்றோருடனான உறவுகள்
  12. சேவைக்கால ஆலோசகராக பொறுப்புகள்

பாடசாலை ஆசிரியரின் பல்வேறு முகாமைத்துவப் பணிகள்

  1. வகுப்புப் பொறுப்பாசிரியர்
  2. பாடப் பொறுப்பாசிரியர்
  3. பாட இணைப்பாளர்
  4. வகுப்பு இணைப்பாளர்
  5. பிரிவுத் தலைவர்

வகுப்பறை முகாமையாளர் என்ற வகையில் உங்களின் கடமைகள்

  • வகுப்பறை ஒழுங்கமைப்பு பற்றி கலந்தாலோசித்து தீர்மானித்தல் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் பற்றி ஆரம்பத்திலேயே கலந்தாலோசித்தல்.
  • அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்குதல்.
  • தூண்டல் – காரியங்களை மேற்கொள்ளல்.
  • தனிநபர் தேவைகள் பற்றி அவதானம் செலுத்துதல்.
  • பாடசாலை தகவல்கள் மற்றும் ஏனைய முக்கியமான விடயங்களை முறைப்படி தெரியப்படுத்துதல்.
  • வழங்கப்பட்ட நாளாந்த கடமைகள் பற்றி தேடிப்பார்த்தல்
  • உரிய சட்ட திட்டங்கள் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்தல்.
  • (மாணவர் ஒழுக்கம், நன்னடத்தை ஆகியன)
  • மாணவர் நடத்தை முகாமைத்துவத்திற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • ஒற்றுமை, பங்கேற்றல் என்பனவற்றை வளர்ப்பதற்கான செயற்பாடுகளை வழங்குதல்.
  • வகுப்பறையினுள் ஆளிடைத் தொடர்புகள் விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குதல்.
  • வகுப்பறையில் காணப்படும் முறையற்ற குழுக்களை இல்லாதொழிக்கவும், கட்டுப்படுத்தவும், வழிமுறைகளைத் தேடுதல்.
  • மாணவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆலோசனை சேவைகளை மேற்கொள்ளுதல்.
  • ஆவணங்களை முறையாக பராமரித்தல்.
  • மாணவனை சரியாக இனங்காணுதல்.
  • சிறந்த கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  • வகுப்பறையின் பௌதிக மற்றும் சமூக மனோவியல் சூழல் பற்றி அறிந்து கடமை ஆற்றல்.
  • இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடல்.
  • சமூக தொடர்புகளை மேற்கொள்ளல்.

1.8. சிறந்த வகுப்பறை முகாமைபின் பண்புகள்

உங்கள் வகுப்பறையைப் பற்றி நினைவு கூறுங்கள். செய்வன சரியாகச் செய்யுங்கள். மேலதிக விடயங்களை சேர்த்துக்கொள்ள தயங்காதீர்கள்.

  • நேரத்திற்கு செயற்படல்.
  • தயார்நிலை
  • வினைத்திறன்ஃ செயல்திறன்
  • மாணவர் பங்கேற்றல் மற்றும் ஒத்துழைப்பிற்கு இடமளித்தல்.
  • பயன்மிகு தொடர்பாடல் (விபரித்தல், விளக்கமளித்தல், விரிவுரை, குரல்
  • கட்டுப்பாடு)
  • பிரச்சினைகளின் போது தெளிவான உத்திகளை கையாளுதல்
  • பக்கச் சார்பின்மை
  • ஒப்பிடுதலிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.
  • பயிற்சிகளை திருத்துதல்ஃ புள்ளியிடல்
  • மாணவர்களின் கற்றல் பிரச்சினைகளை தீர்த்தல்
  • மாணவர்களுக்கு கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • மாணவர்களின் தலைமைத்துவ திறமைகளை விருத்தி செய்தல்.
  • சகல வகுப்பறை நடவடிக்கைகளையும் திட்டமிட்டு ஒழுங்கமைத்து
  • செயற்படுத்துதல்.
  • முன்மாதிரியாக இருத்தல்.
  • நட்புடைமை, வழிகாட்டல், ஆலோசனை வழங்கல் போன்ற பண்புகளைக்
  • கொண்டிருத்தல்.
  • ஆசிரிய- மாணவ, மாணவ-மாணவ இடைத் தொடர்புகளுக்கு வழிவகுத்தல்.
  • வகுப்பறையினுள் கற்றல் சூழல் ஒன்றை ஏற்படுத்துதல்.( அட்டவணை,
  • செயலட்டைகள், படங்கள், வாசகங்கள் நவஉ.)
  • மாணவர்களின் புத்தாக்க திறமைகளை வெளிக் கொண்டுவர
  • சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்
  • பாடசாலை சட்ட திட்டங்கள் மற்றும் பரிமாணங்கள் வகுப்பறையினுள்
  • பாதுகாக்கப்படல்.
  • சிறந்த ஒழுக்கம் காணப்படல்.
  • வகுப்பறை பற்றிய கூர்ந்த அவதானத்துடன் காணப்படல்.
  • வகுப்பறை செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.
  • நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்.
  • வாக்குறுதிகளை நிறைவேற்றல்.
  • சகல மாணவர்கள் பற்றியும் சரியான மற்றும் ஆழமாக அறிந்திருத்தல்.
  • மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி கருத்திற் கொள்ளல்.

1.9. வகுப்பறை முகாமைத்துவம் வகுப்பறைச் சூழ்நிலை

நீங்கள் ஆக்கத்திறன் கொண்டிருக்கும் அளவிற்கு ஆசிரிய நட்சத்திரமாக பிரகாசிப்பீர்கள்.

 பௌதீக சூழ்நிலை  சமூக உளவியல் சூழ்நிலை
சுத்தம்  ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பு
 ஆவணங்கள் மாணவர்களின் அப்பியாசப் புத்தகங்கள்இடாப்புபதிவுப் புத்தகம்சுகாதார அறிக்கைகள் மாணவனை இனங்காணுதல் கற்றல் திறன்கற்றல் அடைவுசமூக பொருளாதார பின்னணிகுடும்ப பின்னணிசுகாதாரம்இயலுமைகள்
 வகுப்பறை பெயர் பலகை  சம்பிரதாயங்கள் சட்ட திட்டங்கள் ஆகியன
 ஆசிரியர் மேசை  நாளாந்த (கட்டாய நடவடிக்கைகள்)
 மாணவர் மேசை ஒழுங்கமைப்பு  வகுப்பறை நேரசூசி பற்றி அறிந்திருத்தல் பாடங்கள் அற்ற நேரங்களுக்கானஒப்படைகள்ஒப்படை வங்கிவினா வங்கிபயிற்சிகள்
அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை  தூண்டல் / ஊக்குவித்தல் கற்றலுக்காகஒழுக்க மேம்பாட்டிற்காக
ஏனைய தளபாடங்கள்  சுயகற்றல் மற்றும் ஒழுக்கம்
 கரும்பலகை , white board, green board மாணவர்களின் பிரச்சினைகள் பற்றி பொதுவான கலந்துரையாடல்,
 அட்டவணைகள் காட்சி , கற்றல் பலகை  மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி அவதானம் செலுத்துதல்,
சமய பொருட்கள்,  மாணவர் முன்னேற்றம் பற்றி தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்,
 மாணவர் உபகரணங்களை வைப்பதற்கான இடம் வசதி வகுப்பு வட்டங்களை நடாத்துதல்,
போதுமான காற்றோட்டம் மாணவர் பங்கேற்பு, தலைமைத்துவ வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்,
 இடர்பாடுகள் அற்றிருத்தல் (உள்ளக / வெளிவாரி)  மாணவர்களின் திருப்தி, மகிழ்ச்சி பற்றி கரிசனை செலுத்துதல், (Child friendly)

1.10 வகுப்பறையை முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள்

நீங்கள் முகம்கொடுக்கும் வகுப்பறை முகாமைத்துவ பிரச்சினைகள்

  • வளப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் (போதிய இடவசதி காணப்படாமை, கற்றல் உபகரணங்கள் பாரம்பரியமான வையாக காணப்படல், புது வளங்களை பயன்படுத்துவதற்கு பயிற்றப்பட்ட ஊழியர்கள் காணப்படாமை)
  • மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் (குறைந்த வரவு , மாணவர் கற்றல் குறைபாடுகள் பொருத்தமற்ற வீட்டுச்சூழல் பெற்றார், உதவியின்மை, வறுமை, ஒழுக்க சீர்கேடுகள்)
  • பெற்றார் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் (படிப்பறிவின்மை பாடசாலை பற்றிய கரிசனை அற்ற மனப்பாங்கு , பொறுப்புக்களை பாடசாலை மீது சுமத்துதல், நேரமின்மை)
  • நிர்வாகம் தொடர்பாக பிரச்சினைகள் (வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை கூடுதலாக காணப்படல், வெளிக்கள வேலைகள் காரணமாக கற்பித்தலுக்கான நேரம் குறைவடைதல், கற்பித்தல் உபகரணங்கள் / சாதனங்கள் தேவையான அளவு கிடைக்காமை, ஆசிரியர் வருகை தராமை, நிவாரண நேரசூசி (Relief Timetable) செயற்படுத்தப்படாமை)

1.11. பிரச்சினைகளுக்கான தீர்வுகள்

உங்கள் பொறுப்பு மிக்க தலைமைத்துவத்தினால் அனைத்தையும் முகாமை செய்து கொள்ள முடியும்.

  • பயிற்சி / விழிப்புணர்வூட்டல்
  • மாற்று வளங்களை பயன்படுத்தல்
  • ஆசிரியர் – மாணவ மனப்பாங்கு விருத்தி
  • கொள்கைகள், சட்ட திட்டங்கள் பரிமாணங்கள் மரபுகள் ஆகியவற்றை தயாரித்தல்
  • ஆசிரியரது அர்ப்பணிப்பு
  • பெற்றார் உதவிகளைப் பெற்றுக் கொள்ளல்

ஆசிரியர்களுக்கான இதவடிவங்களின் தொகுப்பு

பகுதி – 1

பகுதி – 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×