
தேசிய கல்வி நிறுவகம் விண்ணப்பம் கோரியிருந்த கல்விமாணி பாடநெறிக்கான மாணவர்களைத் தேர்வு செய்தவற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி மாதம் தேசிய கல்வி நிறுவகத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களைப் பரீட்சிக்கும் இந் நேர்முகத் தேர்வு இடம்பெறும் அதே தினத்தில் மாணவர்கள் பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பாடங்களுக்குமான, அனைத்து நிலையங்களினதும் மாணவர் நேர்முகத் தேர்வுகளும் பதிவுகளும் தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெறும்.
ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை இந்த நேர்முகத் தேர்வுகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் நேர்முகத் தேர்விற்கான திகதி என்பன அடங்கிய அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் ஊடாக அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.