13 வருட உத்தரவாத கல்வி தொடர்ந்த மாணவர்களுக்கு NVQ 4 பாடநெறிகளில் முன்னுரிமை

NVQ 4 பாடநெறிக்கு உயர் தரத்தில் தொழில்சார் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க அமைச்சரவை அனுமதி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சித்தி மற்றும் சித்தியடையாமையை கருத்திற் கொள்ளாமல், உயர் தரத்தின் தொழில் சார் துறை பயில்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு கல்வி கோட்டத்தையும் உள்ளடக்கியதாக 604 தொழில் துறை பாடங்கள் நடைபெறுகின்றன.
இந்த துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மென் திறன்கள் விருத்தி செய்ய பொது பாடங்கள் கற்க வேண்டியுள்ளதோடு, தரம் 13 இல், தேசிய தொழில் தகைமை மட்டம் 4 பாடநெறியை 6 மாத காலம் கற்பதற்கும் 6 மாதம் தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அந்த மாணவர்களுக்கு என்விகியு மட்டம் 4 க்கான பாடநெறியை தொடர்வதற்காக 7 அமைச்சுக்களின் 17 தொழில் பயிற்சி நிறுவனங்கள் கல்வி அமைச்சுடன் இணைந்துள்ளன.
இத்துறையில் பயிலும் மாணவர்கள் 50,000 பேர் வரையில் பதிவு செய்துள்ளதோடு, அரச பயிற்சி நிறுவனங்களில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது முக்கியமாக உணரப்பட்டுள்ளது.
இதற்கேற்ப அனைத:து அமைச்சுக்களின் கீழும் இயங்கும் தொழில் பயிற்சி நிலையங்களில் இவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது கட்டாயமானதாக்குவதற்கும், அந்த நிலையங்களில் என்விகியு 4 பாடநெறிகளுக்கு மாணவர்கள உள்ளீர்கும் போது தொழில் துறையில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, பயிற்சிக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தீிர்மானித்துள்ளது.
இதற்காக கல்வி அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.